Monday 9 July 2012

சில உறவுகளின் அருமை பழக பழகத் தான் தெரியும்மாம்.பழக பழகத் தான் தெரிகிறது மனதில் இருக்கும் வஞ்சகமும், நாவினால் தெளிக்கும் விஷமும்.

விடுதலை

உன் ஸ்பரிசம் தீண்டா வகையில் என் கேள்விகள் இருக்கும்... வார்த்தையில் அக்கினி தெறிக்கும், ஆபாசம் இருக்காது.. உன் நெஞ்சுக் கூட்டில் / மண்டை ஓட்டில் பதில் இருந்தால் வந்து தந்து விட்டுப் போ ? அடிமைகள் கேள்வி கேட்காத வரை விடுதலை இல்லை.

விடுதலைப்போராளி


நான் ஒன்றும் மகான் இல்லை.உன்னைப் போல் மனிதன் தான்.என் ஆசா பாசங்கள்,நான் என்ற எல்லையை கடந்து இருப்பதால். அது உன்னையும் என்னையும் பிரிந்துக் காட்டுகிறது

Sunday 8 July 2012

எங்க ஊரு கிரிக்கெட்டு

லேய் அவனுங்ககிட்ட மேட்ச்க்கு சொன்னியா ... பெட் மேட்ச்சா ... இல்ல பிரீன்ட்லி மேட்ச்சா .. நாளைக்கு எப்படியாவது அவன் பந்தை ஓட ஓட விரட்டனும் ... பத்தாம் கிளாஸ்க்கு உள்ள படிக்கிறவன் மட்டும்தான்னு சொல்லிடு ..இப்படி தான் முடியும் பெரும்பாலான வெள்ளிக்கிழமை வகுப்புகள் ... வகுப்புக்கு நாலு சச்சின் , நாலு அக்ரம், ரெண்டு மோங்கியா இருப்பாங்க... அன்றைய போட்டியில் யார் அதிகம் ரன் எடுக்கிறான்களோ அவங்க தான் மறுவார வகுப்பின் ஹீரோ ... குறைந்தது இரண்டு மூன்று நாட்களாவது அவர்களை பற்றிய பேச்சி இருக்கும்.. லெக்ல ஓரு சிக்ஸ் அடிசாம் பாரு ... நேரா கோரி விட்டாம் பாரு நீ எல்லாம் முடியவே முடியாது ...அவன் பந்துலையா ...அவன் காட்டுத் தனமா போடுவான.. அவன் பந்துலே அடிச்சிடானா.. இந்த வார்த்தைக் காகவே முட்டியை தேச்சி... மூஞ்சில அடிவாங்கி வெறியோடு நிக்கணும் களத்தில... லேய் காட்டுப்பயல அவன்,நீ எதுக்கு லெக்ல பந்து போடுற .. ஆப்ல போடு ... எடுக்குற பத்து ரன்களை எல்லாம் பதினைந்தாய் சொல்வது , முட்டாப் பய கூட தெளிவா சொல்லுவான் இது ரன் அவுட் என்று இருந்தும் வீம்புக்கு இல்லை என்று சண்டை போடுறது ... ஆசை ஆசையாய் வீட்டில் சண்டை போட்டு வாங்கிய பேட் எல்லாம் தரையில் அடித்தே உடைத்து போடுவார் பக்கத்துக்கு தோட்டத்துக்காரர்... வீட்டில் கேட்டா அதுக்கு வேற ஓரு கதை ரெடி பண்ணனும்... எங்கள போய் விழுந்து தொலைஞ்ச சனியன் சொன்ன கேக்கான .. சனி ,ஞாயிறு பள்ளிக்கூடம் இருக்குற ஸ்கூல் பார்த்து சேக்கணும்.. வார வாரம் இதே தொல்லையா போச்சி .. அப்பா வரட்டு, உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிட்டு தான் மறு வேலையே ? இப்படி ஆயிரம் ஆயிரம் கதைகள் .. இப்போ எல்லாம் தெருவில் நின்னு கிரிக்கெட் விளையாடும் பசங்களை பார்த்தா சிரிப்பா தான் வரும். அளுக்கு படிந்தே இருக்கும் கால்கள் எல்லாம் சூவிற்குள் அடங்கிக் கிடக்கும் காலம் வரும்.. எதிர் வீட்டு ஜன்னல் .. ஒட்டு வீடுக்கு எல்லாம் நல்ல காலம் பிறக்கும்.. நாங்களும் ஓட்டை ஒடச்சி,ஜன்னலை ஒடச்சி வந்தவன்க்க தாண்டி ...விடு அந்த பசங்களை ..விளையாடட்டும் அவங்க ...வீட்டுக்குள்ள இருந்து மனைவியை சப்தம் போடும் நாள் நெருங்கிக் கொண்டு இருக்கிறது ... பாவம் இந்த காலம் தான் எத்தனை மாற்றங்களை சப்தம் இல்லாமல் நிகழ்த்திக் காட்டி விட்டது ... கடவுளே உன்னிடம் வரங்கள் மீதம் இருந்தால் மீண்டும் ஓரு வரம்தா அதே புழுதிக் காட்டில் நண்பர்களுடன் ஆட வேண்டும் ஓரு கவலையில்லா ஆட்டம்.. தருவாயா ?