Wednesday 23 May 2012

தன்னம்பிக்கையின் கதை ...

மலர்ந்தால் உதிர்வேன் என்று .
தெரிந்தும் மலர்ந்தேன்.
பிறந்தால் இறந்து விடுவேன் என்று.
தெரிந்தும் பிறந்தேன்.

ஆகஸ்ட் 15

வெள்ளையனிடமிருந்து சுதந்திரம் வாங்கி இந்திக்காரனிடம் அடகு வைத்த தினம் இன்று...நாம் தமிழர்கள்..... நமக்கென்று விடியட்டும் ஒரு தேசம்..

 சொல்லாமல் வந்தவள், சொல்லாமல் செல்வது முறையோ ?

காலம் உனது ... 

நம்பிக்கையை விதைத்தவள் நீ தானே ?

வா நமக்கென ஓரு நந்தவனம் செய்வோம்..

நம் தலைமுறை அங்கே தழைக்கட்டும்.

ஐயம் மற கண்மணியே..

பசித்த வேளை உணவு..

பகட்டான வாழ்க்கைக்கு.

வசதி மறுத்தாலும்..

பாவமில்லா வாழ்க்கை வாழப் பழகுவோம்.

கரம் கொடு .. கரைச்சேர்ப்பேன் .

ஓரு ஈழ குழந்தைக்கு பதில் கடிதம் ...


எங்கே இருக்கிறாய் என் நட்பின் இதயமே..

யாழ் வீதிகளில் நாம் கரம் கோர்த்து நடந்ததை மறவாயோ ?

நலம் என்று சொல்ல எதுவுமில்லை ... 

இருக்கிறேன் என்று சொல்ல உயிர் இருக்கிறது . 

உன் குரல் கேட்டு வந்த நேரத்தில் ...

குண்டுகள் என்னுடல் சிதைத்ததை அறிவாயோ ?

முள்வேலிக்குள் இருக்கிறேன் ..

வருவேன் .. தம்பி வந்தால் .. 

மற்றபடி....

நலம் அறிய ஆவல் தோழியோ .

புறக்கணிப்பு

தோல்வியை விட புறக்கணிப்பின் வலி அதிகமாக தான் இருக்கிறது. நான் ஒன்றும் இதயம் இல்லாதவன் இல்லை

வஞ்சனை ...

எதிர்பார்த்த ஓன்று எதிர்பார்த்த போது விட்டு நழுவும் போது .. தைரியமான மனதும் கூடவே சேர்த்து நழுவுகிறது. மனமே வஞ்சனை செய்யாதே.!!!

விமர்சனம் .

என்று உன்மீது விமர்சனங்கள் வைக்க படுகிறதோ அன்று பிறர் உன்னை கவனிக்க தொடங்கிவிட்டனர் என்று பொருள். விமர்சனங்களை ஏற்று கொள்ள பழகுங்கள்

நான் ...

அவமானங்கள் ஓன்றும் புதிதில்லை. இறைவன் ஒரே நோக்கத்திற்காக பலரை படைப்பதில்லையாம், ஓரு வேளை நான் .....??? அவமானங்களை பழகு. த்ரோகங்களில் இருந்து கற்றுக்கொள். ( எனக்கே நான் சொல்லும் பிராண மந்திரம் )

அடையாளம்

நீ எதுவாகவும் என்னை நினைத்துக்கொள். நீ மாற்ற நினைக்கும் எந்த குணம் மாறினாலும் நான் நானாக இருப்பதில்லை . சுய அடையாளங்கள் இழப்பத(விற்பத)ற்கில்லை.

தமிழ் தலைவன்

நீ என்றோ எரிய வைத்த புரட்சியின் கனல்கள் இன்றும் பற்றி எரிந்து கொண்டே தான் இருக்கிறது.. தலைவன் என்று உன்னை சொல்லி, உன் கரம் கோர்த்து நடப்பதே சாலச் சிறந்தது... முகம் தெரியா பறவைகளுக்கு ,உன் வருகை அறிய ஆசை ...காலை வணக்கம்

நன்பேண்டா ....

எத்தனை முறை சந்தேக கேள்விகள் , சண்டைகள் , கருத்து மோதல்கள் இருந்தும் ... இறுதியில் நீ என் நன்பேண்டா என்று சொல்லி முடிக்கிறான் பாருங்க .. அவன் தான் நண்பன் ... You are great machi..

அடையாளங்கள்

நீங்கள் எதுவாகவும் என்னை எண்ணிக்கொள்ளுங்கள் நான் நானாகவே இருக்க விருப்புகிறேன். சுய அடையாளங்கள் மனிதனை வேறுபடுத்தி காட்டுபவை.

விழ விழ எழுவேன்

நான் விழ விழ எழுவேன் என்று தெரிந்து தான் இத்தனை சோதனைகளை என் தலை மேல் இறக்குகிறான் போல் இந்த இறைவன். விழ விழ எழுவேன் வீழ்ந்து விட மாட்டேன்..இது இறைவனுக்கும் தெரியும் .

மனிதம்

என் பின்புலம் ,என் ஸ்தல வரலாறு எல்லாம் உனக்கு தேவை இல்லை .. நீ மனிதனை மனிதனாய் மதித்தாலே போதும்.

தகுதியில்லை .

என்னிடம் குற்றம் காணும் தகுதி உனக்கில்லை. முதலில் நீ உன் குறைகளை கலைந்துவிட்டு வா. மற்றவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்

சுயநலம்

என்ன சொல்வது .. தான் பலன் பெறுபதில்லை என்று தெரிந்தும் என் சந்ததிக்காக கனி தரும் மரம் வளர்க்கும் இந்த பாசமிகு பெரியவர்களை. தள்ளாத வயதிலும் சுயநலம் அதிகம் தான்.

என் தேவதை ..

நான் விழுவது ஓன்று புதிதில்லை .. எழுவது தான் புதிது ..எதிரிகள் கவனம் என்னுள் நம்பிக்கை விதைகளை ஓரு தேவதை உற்றி சென்று விட்டாள்.. இனி வசந்த காலம் தான் 
பிறருடைய துக்கங்கள் உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது கேலி பார்வை / கேலி பேச்சை தவிர்ப்பது நலம். அவருடைய துக்கங்களை போக்கும் சக்தி / மருந்து  உங்களிடம் இருப்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இங்கு யாரும் எல்லா விடயங்களையும்  அனைவரிடம் பகிர்வதில்லை.

விடையில்லா வாழ்க்கை தேர்வு ?

நமக்கு எல்லாம் கணக்கு சுட்டு போட்டாலும் வராது பாவம் அந்த வாத்தி எனக்கு கணக்கு சொல்லி கொடுத்து கொடுத்தே அவர் மக்காகி போய்டார் ... இப்படி இருந்த நானே MBA முடிச்சி வேலைக்கும் போய்டேன் .. கவலை படாதீங்க மக்காள் .. வெற்றி பெறுபவர்களுக்கும் வாழ்த்துக்கள் , தோல்வி அடைபவர்களுக்கும் வாழ்த்துக்கள் ...வாழ்க்கை பாடம் என்று ஓன்று இருப்பதை புரிந்து கொள்ளுங்கள், அதில் இலக்கை அடைவதே உண்மையான வெற்றி.

நான் யார் ?

அப்பாவிற்கு நான் டாக்டர் ஆகணும் , அம்மாவிற்கு நான் வழக்குரைஞர் ஆகணும் ஆனால் யாரும் நான் என்ன ஆகணும் என்று கேட்கவே இல்லை .. அதான் இப்போ நான் நானாகவே இருக்கிறேன் .. உங்கள் மொழியில் வெட்டியா தான் இருக்கேன். மக்காள் என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீங்க ... உங்கள் குழந்தைகள் என்னவாக வேண்டும்மென்று அவர்களிடமே விட்டு விடுங்கள் ... திணிப்பு வெறுப்பை தான் உருவாக்கும் ...

(நாம் எதுவாக ஆக வேண்டும் என்று யாரோ ஒருவர் தீர்மானம் செய்கிற பொழுது இதுவாக தான் இருக்க முடியும் போல )

சுபதினம் தான் தேர்வு முடிவு வரும் நாள் ..

அப்பாடா என் மகனும் பாஸ் ஆகிடான் என்று என் அம்மா / அப்பா சந்தோஷ பட்டது இதே போல் ஓரு சுப தினத்தில் தான் ... பிறகு எப்படி தான் சந்தோஷம் வராமல் இருக்கும் .. ரேங்க் அட்டையில் இதுவரை சிகப்பு மை தவிர வேறு எதையும்மே பார்க்க கூடிய புண்ணியம் அவர்களுக்கு கிடைக்கவில்லை.. எங்கேயப்பா இருக்கீங்க என்னை பாஸ் பண்ண வைத்த புண்ணியவான்கள் எல்லாம்

அன்பு

நிபந்தனையின்றி அன்பு செலுத்துங்கள். வரைமுறைக்குட்டப்பட்டு செலுத்தும் எதுவும் உண்மையான அன்பாக இருக்க முடியாது.

சுற்றமே உனக்கும் நன்றி !!

உங்களிடம் குற்றம் காணும் சுற்றத்திற்கு நன்றி சொல்லுங்கள் .. அவர்களின் குறை காணும் குணம் தான், உங்கள் குறைகளை நீங்களே நிவர்த்தி செய்ய உதவியதை மறவ வேண்டாம்

சக்தி கொடு !!

ஒடி ஒடி களைத்து போனேனேன் .. ஆனாலும் வெறுத்து போகவில்லை .. என் எதிரிகள் இருக்கும் வரை என் ஓட்டம் முடிவதில்லை ... மனமே சக்தி கொடு ...

அத்தனைக்கும் ஆசை படு ....

சிறகிருக்கும் பறவை எல்லாம் உயர உயர பறப்பதில்லை அத்தனைக்கும் ஆசை படு..இலக்குகள் தொட்டு விடும் தூரம் தான்

தன்னம்பிக்கையின் கதை

இங்கே எல்லாருக்கும் ஓரு தன்னம்பிக்கையின் கதை உண்டு .. கர்வம் கொள் .. உன் கதை தான் சிறந்தது என்று ..ஏனெனில் கதைகளை விட நிஜத்தின் வலி  தெரிந்தவன் நீ மட்டுமே..

எதிரிகள் தேவை ?

உங்களுக்கு தேவை ஓரு சிறந்த எதிரி என்பதை நினைவில் கொள்ளுங்கள். எதிரியின் செயல்கள் தான் நீ எதுவாக ஆக வேண்டும்மென்பதை தீர்மானம் செய்கிறது 

தேவ பாஷைகள்

குழந்தைகளின் தேவ பாஷைகள் புரிய மறுத்தாலும் , அது ஓரு மிகச்சிறந்த சங்கீதம் தான்