Saturday 18 August 2012

காதல் தேவதை


எனக்கான தேநீர், குவளையில் எப்போதும் நிரம்பியே வழிகிறது . என் கவலைகள் யாவும் உன்னை பற்றியேத் தான். #தூர தேசத்தில் என் நினைவில் ஒருத்தி.

அகம் ஒன்றும் புறம் ஒன்றும் வைத்து பேசித் திரிவதை விட.. நினைத்ததை வெளிப்படுத்துவது மிகச் சிறந்தது. சில பல காயங்களை தாங்கும் சக்தி இருந்தால்.

காதல் தேவதை


உன் ஆசிர்வாதத்தால் நிரம்பி வழிகிறது... வறட்சியான நிமிடங்கள் கூட ... குளிர் தரும் மௌன புன்னகைக்கு நீயே தான் காரணம்.

மண்வாசனை


மறப்பதிற்க்கில்லை நேசித்த இதயமும்.... சுவாசித்த காற்றும்.

கத்தி முனையை காட்டிலும் பேனா முனை வலியதாம். விரல்களை வெட்டிய பின் உங்கள் பேனாமுனை என்ன செய்து விடும்.அடிமைகள் கேள்வி கேட்காத வரை விடுதலை இல்லை.

எனது சமுக பொறுப்புக்கள் சுய நலனுக்காய் மீறப்பட்டு நான் என்பதை தாண்டி நாமாகும் போது மனசாட்சிகளும் சட்டங்களுக்கும் செயலற்றே போகின்றன.

செய்கிற தவறுகளுக்கு ஏற்ப மனதை / மனசாட்சியை சரி செய்து கொள்வது தான் ... தவறின் உட்ச கட்டம்.