Friday 21 June 2013

மரபுகள்

உடுத்துகிற புடவையில், சூடிக் கொள்கிற நெற்றிப் பொட்டில், கட்டிக் கொள்கிற மாங்கல்யத்தில் பகுத்தறிவை தேடினால் என்றோ ஒரு நாள் மீண்டும் நிர்வாணமாய் அலைந்து திரிய வேண்டும் .

Tuesday 9 April 2013

மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன்



மூன்று லட்சத்திற்கு அதிகமான இந்துமதக் கடவுள்கள் .. பரலோகத்தில் இருக்கிற பரம பிதாக்கள் இத்தனை இருந்தும் யாரும் வரவில்லை. நீ வந்தாய் நாங்கள் நிமிர்ந்து நடந்தோம்... நீயே தான் தமிழ் கடவுள்.. நீ ஒருவனே தமிழினத்தின் கடவுள்.

வாழ்க உன் நாமம்.




இனி வரும் நியாயத் தீர்ப்பின் காலங்களில் புத்தனின் பெயரால் கிறிஸ்துவின் பெயரால்
 அல்லாவின் பெயரால், வன்கொலை செய்யப்பட்டோர் என தரம் பிரிக்கக்கூடும்.

# செத்து மடியும் மனிதத்திலும் சோரம் போகாத இறைநம்பிக்கை.

Sunday 31 March 2013

முதல் காதல் ... காதலி




சட்டென்று உன்னை அடையாளம் காட்டியது... கனத்த பேருந்து நெரிசல் சப்ததிற்க்கிடையில்
 கேட்ட உன் சிரிப்பொலி ... நரம்பில் ரத்தம் வேகத்தை கூட்டி புத்திக்கு எதையோ உணர்த்தியது. அவள் தான் அவள் என்று. அனிச்சையாய் குரல் வந்த திசை நோக்கிய கண்கள் நிலைகுத்தி நின்ற தருணம் .உன் பார்வை என் விழியில் மோதி திரும்பத் தெரியாமல் தவித்து நின்றது. அவளே அவளே தான்.... சில தெய்வ கணங்கள் நீ உன்னை மறந்தாய். நான் என்னை மறந்து உன்னை நினைத்த பொழுதுகளில் நீ உன் தோழியின் முதுகிற்கு பின்னே உன் உருவத்தை மறைத்தாய். 

அதுவே அதுவே தான் நீ... நீயே தான் அது என்று மெய்ப்பித்து சொன்னது.

மதியம் தாண்டிய வகுப்பறை நேரம் ஒட்டுக் கூரையின் விரிசலுக்கிடையில் உனைத்தேடி விழும் அந்த ஒற்றை ஒளிக்கிற்றையில்..தேவதை என்றே உனை நினைக்க கூடும்..உனைத் தேடியே பார்வைகள் அலைமோதும்... நீயோ என் பார்வையின் தேடல் தெரிந்தே குனிந்து ஒளிந்து கொள்வாய்....அடியே உருவங்கள் மாறிப்போனது இருந்து இன்றும் நீ அந்த ஏழாம் வகுப்பு அங்கையற்கண்ணி தான்.

Tuesday 19 February 2013

பிதாவின் பாவங்கள் மன்னிக்கடவது


என்ன பாவம் செய்தாய் பிதாவே ?

 உன் சிலுவையின்னும் கீழிறக்கப்படவேயில்லை


உம் பாவமும் ஓரு நாள் மன்னிக்கப்படும்....

Friday 25 January 2013


இன்று. நாளை நாளை மறுநாள் உயிர்த்தெழுவோம் நம்பிக்கையில் இறந்து போனான் கலியுக கடவுள். # பாவி பசங்க அதுக்குள்ள குழிக்குமேலே ப்ளாட்டும் போட்டு , நடுவுல ரோடும் போட்டு வித்தும் புட்டாங்க சுடுகாட்ட.

என் ஆயுள் ரேகை திசைமாறி..... உன் திசை காட்டியே நிற்பது தான்... காதல் தேவன் நம் காதலுக்கு தந்த வரமும்.. எனக்கு தந்த சாபமும்.

ஓருபார்வையில் ஓராயிரம் அர்த்தங்கள் ஏனோ ? தர்க்கமோ , தத்துவமோ பேசவரவில்லை. # அபலை சிறுமி உதவி கேட்க்கும் தருணங்களில்.

பிரபஞ்சத்தின் கடைசிமனிதனும் நான்தானோ ? உன் விரல் கோர்த்து நடை பழகிய வீதியில்..... நான் மட்டும் தனிமையில் நடக்கையில். மனம் சொல்லியது ?